முகப்பு
அரியலூர்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் வழங்கல்

திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்கள் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

அரியலூர்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் வழங்கல்

திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்கள் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்கள் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
 இப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் இந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் இன்பராணி தலைமை வகித்தார். குழந்தைகள் தின விழாவையொட்டி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணிவண்ணன் கலந்து கொண்டு சுகாதாரம் மற்றும் கல்வியறிவு குறித்து பேசினார். பின்னர், அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் வழங்கப்பட்ட நோயாளிகள் அமர்ந்துசெல்லும் சக்கர நாற்காலிகளை பெற்றுக் கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →