முகப்பு
அரியலூர்

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

அரியலூர் வட்டத்தில் சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிருக்கு பிரதமரின் புதிய காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன் அடையலாம்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

அரியலூர் வட்டத்தில் சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிருக்கு பிரதமரின் புதிய காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன் அடையலாம்.
இதற்காக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகையான ரூ.26,800-க்குரிய பிரீமிய தொகையான ரூ.402-யை விவசாயிகள் செலுத்தவேண்டும்.
இப்பிரீமிய தொகையை பயிர் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையம் அல்லது காலிகடை மடை ஏஜென்சி,தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செலுத்தலாம்.
இதற்காக சம்பா நெல் நடவு செய்தவுடன் வயலின் சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் பிரீமியத் தொகையை 30.11.2017-க்குள் விவசாயிகள் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட வருவாய் கிராமங்களில் இயற்கை சீர்கேட்டினால் பயிர் மகசூல் சராசரிக்கு கீழ் குறையும்போது  உரிய நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செலுத்தப்படும்.
எனவே விவசாயிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ரா.பழனிசாமி அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →