அரியலூர்

பயிர் விளைச்சல் போட்டியில் வென்ற விவசாயிகளுக்கு வெகுமதி

DIN

அரியலூர் மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூலை பெற்ற விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை காசோலை வழங்கப்பட்டது.
ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் க.லட்சுமிபிரியா பங்கேற்று, கரும்பு பயிரில் முதல் பரிசு பெற்ற வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த கி.ராஜேந்திரனுக்கு, ரூ.15,000-க்கான காசோலையினையும், இரண்டாம் பரிசு பெற்ற டி.ரமேஷுக்கு ரூ.10,000-க்கான காசோலையையும், நெல் பயிரில் முதல் பரிசு பெற்ற கு. சின்னப்பாவுக்கு ரூ.15,000-க்கான காசோலையினையும், நெல் பயிரில் இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.கண்ணனுக்கு ரூ.10,000-க்கான காசோலையினையும் வழங்கினார்.
இதேபோல்,  நடப்பாண்டிலும் நடைபெறவுள்ள மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கு நுழைவுக் கட்டணமான ரூ. 100- மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கு நுழைவுக் கட்டணமான ரூ.50- செலுத்தி பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு  ஆட்சியர் க.லட்சுமி பிரியா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் அய்யாசாமி,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) இளங்கோவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்புராஜன், வேளாண் செயற்பொறியாளர் கான் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT