அரியலூரில் இன்று காவிரி உரிமை மீட்புப் பயணம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்பு பயண 2 ஆம் குழுவினர் தங்களது பயணத்தை அரியலூரில் ஏப். 9 ஆம் தேதி தொடங்குகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்பு பயண 2 ஆம் குழுவினர் தங்களது பயணத்தை அரியலூரில் ஏப். 9 ஆம் தேதி தொடங்குகின்றனர்.
இதையொட்டி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி சார்பில் அரியலூரில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடக்கி வைக்கிறார்.
பயணத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, துணை செயலாளர் வி.பி. துரைசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. ராசா, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பொதுக்கூட்டத்துக்கு பிறகு, 6.30 மணியளவில் பயணம் தொடங்குகிறது. அன்றிரவு அரியலூரிலேயே தங்கி, ஏப். 10 ஆம் தேதி காலை 7 மணிக்கு அரியலூரில் தொடங்கும் நடைப்பயணம் கீழப்பழுவூர், திருமானூர், திருவையாறு, அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணத்தில் நிறைவடைகிறது. ஏப்.11 அன்று காலை 8 மணிக்கு கும்பகோணத்தில் தொடங்கி திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, தலைஞாயிறு, மணல்மேடு, முட்டம், காட்டுமன்னார்குடியில் நிறைவடைகிறது. ஏப்.12-ம் தேதி காலை 8 மணிக்கு காட்டுமன்னார்குடியில் தொடங்கி லால்பேட்டை, குமராட்சி, சிதம்பரம் சென்று முக்கொம்பிலிருந்து வரும் பயணக்குழுவுடன் இணைந்து கடலூர் சென்றடைகிறது.