சிறுபான்மைப் பிரிவு கிறிஸ்தவ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அருகே சிறுபான்மைப்பிரிவு கிறிஸ்தவ கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அருகே சிறுபான்மைப்பிரிவு கிறிஸ்தவ கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மதபோதகர்கள்,சிறுபான்மைப் பிரிவினர் தாக்கப்படுவதைக் கண்டிப்பது, அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தை திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கரன் தொடக்கி வைத்து பேசினார்.
கூட்டமைப்புத் தலைவர் வின்சென்ட் ஞானபிரகாசம், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ராபார்ட் ரஜினிகாந்த், சாலமோன்,செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.