அரியலூர்

அரியலூர், பெரம்பலூரில் மக்கள் குறைகேட்பு நாள்

DIN

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி கூட்டத்துக்குத் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 373 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய  நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினார் நலத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.47, 250 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார். 
மாவட்ட வருவாய் அலுவலர்  சே.தனசேகரன், சமூக பாதுகாப்புத்திட்டத் துணை ஆட்சியர் அ.பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெ.பாலாஜி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூரில் :    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில்  குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்து,.  பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 238 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இதை  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மனித உரிமைகள் தினத்தையொட்டி, , மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் ,  வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி உறுதிமொழி வாசிக்க, அதனை அனைத்துத் துறை அதிகாரிகள், பணியாளர்கள் திரும்பக் கூறி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வுகளில்,  வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மகளிர் திட்ட உதவி இயக்குநர் தேவநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT