முகப்பு
அரியலூர்

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் டிராக்டர்மீது மோதி சாவு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் டிராக்டர் மீது மோதி உயிரிழந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் டிராக்டர் மீது மோதி உயிரிழந்தார்.
திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி நடுத்தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் ஆனந்த் (31). சனிக்கிழமை இரவு இவர் திருமானூரில் இருந்து ஏலாக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
ஏலாக்குறிச்சி பிரிவுச் சாலை அருகே சென்றபோது, கரும்பு ஏற்றிக்கொண்டு சர்க்கரை ஆலைக்கு சென்றுக் கொண்டிருந்த டிராக்டரின் பின்னால் இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்த ஆனந்த தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்தார். இதுகுறித்து திருமானூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →