முகப்பு
அரியலூர்

திமுகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு

தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
அரியலூர், தா.பழூர், செந்துறை, ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆணவக்கொலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவக் கொலை தடுப்புச் சட்டமியற்ற வேண்டும். ஜயங்கொண்டத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் வீரத்தமிழன்,ஜெகதீஸ்வரி சாவு தற்கொலையா, கொலையா என போலீஸார் விசாரிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்ற எதிர்ப்பார்ப்பு  நிறைவேறவில்லை.
மின்வாரிய ஊழியர்கள், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்கள் போராடத் தொடங்குவதற்கு முன்னதாக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
நீட் தேர்வு ரத்து கோரி திராவிடர் கழகம் சார்பில்  நடைபெறும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும். காவிரி நீர் பிரச்னையில் தமிழக உரிமையைப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →