அரியலூர்

அரியலூர் ஆட்சியரகம் வந்த  மாணவ,மாணவிகள்

DIN

ஒரு மாவட்ட ஆட்சியரின் நிர்வாகம் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிய ஜயங்கொண்டம் அடுத்த குழவடையான் கோகிலாம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்செவ்வாய்க்கிழமை ஆட்சியரகம் வந்தனர்.
கல்வி களப்பணிக்காக திங்கள்கிழமை  மாலை  வந்த அப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவ,மாணவிகள், ஆட்சியர் க. லட்சுமிபிரியாவை சந்தித்து, ஒரு ஆட்சியரின் நிர்வாகம், பொறுப்புகள், பல்துறைத அலுவலர்களின் பணிகள், கடமைகள் குறித்து கேட்டறிந்தனர். அவர்களுக்கு ஆட்சியர் பதில் அளித்தார். இதை ஆர்வமுடன் கேட்டறிந்த மாணவ,மாணவிகள் இது போன்ற கல்வி களப்பணிகள் எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்றனர். பள்ளி நிர்வாக இயக்குநர் சுயம்பிரகாஷ், பள்ளி முதல்வர் பி.ஏ. சிவராமகிருஷ்ணன், ஆசிரியர்,ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT