முகப்பு
அரியலூர்

மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு முக்கியமானது

மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது என்றார் திருமானூர் ஒன்றிய தொடக்கப் பள்ளி மேற்பார்வையாளர் வனிதா.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது என்றார் திருமானூர் ஒன்றிய தொடக்கப் பள்ளி மேற்பார்வையாளர் வனிதா.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழையூர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் பங்கேற்று பேசியது: 
திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 106 தொடக்கப்பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை கொண்டதாக கீழையூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் கல்வி  கற்பிக்கப்பிக்கப்படுகிறது.  
மத்திய,மாநில அரசுகளின் சார்பில் நடைபெற்ற திறனாய்வு போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பான இடத்தை பெற்றுள்ளனர்.
மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிப்பதில் ஆசிரியர்களின் பங்கு எவ்வளவு முக்கியமோ  அதே அளவிற்கு பெற்றோர்களின் பங்கும் முக்கியம் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →