அரியலூர்

ஜயங்கொண்டத்தில் ஜமாபந்தி நிறைவுநாளில் குறைதீர் கூட்டம்

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு நாளை முன்னிட்டு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டம் வட்டாட்சியரகத்தில் 1427ஆம் பசலி ஆண்டு ஜமாபந்தி கடந்த 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்றது. இதில் உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட தா. பழூர், சுத்தமல்லி, குண்டவெளி, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் ஆகிய உள்வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களிடம் இருந்து 1237 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 480 மனுக்கள் ஏற்கப்பட்டன. 177மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 580 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவுநாள் விவசாயிகள் மாநாட்டுக்கு கோட்டாட்சியர் பாலாஜி தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் வேல்முருகன், தாரகேஸ்வரி, கோவிந்தராஜ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் விவசாய சங்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம் பொன்னேரி, வளவனேரி ஆகியவற்றை ஆழப்படுத்த வேண்டும். வெங்கடாசலம் ஜமாபந்தி நாட்களில் குடிநீர் தொட்டி கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். ஜயங்கொண்டத்தில் நூலக கட்டடம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
மாநாட்டில் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வட்டவழங்கல் அலுவலர் சம்பத் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT