அரியலூர்

தத்தனூர் கல்லூரியில் உலக கருணை நாள் கருத்தரங்கு

DIN

அரியலூர் மாவட்டம்,உடையார்பாளையத்தைஅடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் உலக கருணை நாள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் தலைமை வகித்து,கடவுளில் இருந்து மனிதர்களை பிரித்தவர்கள் மத்தியில் மனிதர்களிடம் இருந்து கடவுளை கண்டவர் புத்தர்.வள்ளலார் பார்வையில் பக்தியை விட அன்பு தான் உயர்ந்தது. அன்பு தான் ஆன்மநேயத்தின் அடித்தளம். அன்பும் இரக்கமும் தான் சன்மார்க்கம். ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் என்றார் வள்ளலார்பெருமாள். அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும் படங்கள். அவர்கள் பேசும் பேச்சு ஜீவன் இல்லாத கிண்கிணி ஓசை என்றார் பேகன். எனவே நாம் சில மனிதாபிமான வேலைகளைச்செய்ய வேண்டும். நாம் வெளிப்படையாக அல்லது மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க உறுதியேற்க வேண்டும். இன்று ஒரு நாள் மட்டுமன்றி ஒவ்வொரு நாளும் கருணை மற்றும் தன்னலமற்ற செயல்களை செய்ய வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து கல்லூரி இயக்குநர் த.ராஜமாணிக்கம், கல்லூரி இணைச்செயலர் எம்.ஆர்.கமல்பாபு, கல்வியியல் கல்லூரி ஆலோசகர் க.வரதராஜன்,பேராசிரியர்கள் பழனியாண்டி,சுரேஷ் ஆகியோர் பேசினர்.பேராசிரியர் இளையபெருமாள் வரவேற்றார். ஏற்பாடுகளை பேராசிரியர் சுரேஷ், விநாயகவேல் ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT