கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி மறியல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொலை மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்யக்கோரி திராவிடர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொலை மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்யக்கோரி திராவிடர் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன். இவர் திராவிடர் கழகம் கட்சியில் செந்துறை ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்நிலையில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ராஜசேகர் தம்மை அவ்வப்போது மிரட்டுவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறி செந்துறை-ஜயங்கொண்டம் சாலையில் கீழமாளிகை பிரிவு சாலையில் திராவிடர் கழகத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸார், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.