முகப்பு
அரியலூர்

9 கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் மற்றும் செந்துறை பகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 9:23 am IST
பகிர்:

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் மற்றும் செந்துறை பகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட துளார், அசவீரான்குடிக்காடு, தளவாய், ஆதனக்குறிச்சி,ஆலத்தியூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் திமுக ஆட்சி வந்தவுடன் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
இதேபோல ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆமணக்கன்தோண்டி, பெரியவளையம், கழுவன்தோண்டி,தேவமங்கலம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற  கூட்டங்களுக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் மணிமாறன் தலைமை வகித்து பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.