அரியலூர்

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

DIN

அரியலூர் அருகேயுள்ள எருத்துக்காரன் பட்டி  ஊராட்சியில் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு-2 சார்பில் நடைபெற்று வந்த சிறப்பு முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
கடந்த 15 ஆம் தேதி முதல் நடைபெற்ற சிறப்பு முகாமில், இலவச மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம்,பள்ளி மற்றும் கோயில் வளாகங்கள் தூய்மை,சாலையோர முள்புதர்களை அகற்றுதல், மழை நீர் சேகரிப்பு,நெகிழி விழிப்புணர்வு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் நடைபெற்றது. 
மேலும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. 
வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர்(பொ)ஜெயகுமார் தலைமை வகித்தார். அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார், அரிமா சங்க செயலர் சங்கர், ராஜேஷ்
 ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் ராஜேஷ், அன்னை அறக்கட்டளை நிறுவனர் ராஜா ஆகியோர் பங்கேற்று,நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலகு-2 அலுவலர் ராஜசேகர் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT