அரியலூர்

போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 4  பேர் கைது

DIN

அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் அருகே செயல்பட்டு வந்த  போலி மதுபான ஆலை செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மதுபானம் தயாரித்த பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர்- கடலூர் மாவட்டங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ள தஞ்சாவூரான் சாவடியில் ஒரு சில வீடுகளே உள்ளன. இதில் உள்ள ஒரு வீட்டில் பட்டுசாமி மனைவி காவேரி (35) வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் மதுபானங்கள் தயாரித்து , மொத்தமாக விற்பனை நடைபெறுவதாக திருச்சி மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீஸார் செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையில்,  அங்கு மதுபாட்டில்கள் தயாரிப்பதற்கான இயந்திரம், , 30 பெட்டியில் 1440 மதுபாட்டில்கள், மூடிகள், 35 லிட்டர்  கேனில் 1540 லிட்டர் எரிசாரயம், வடிகட்டி உட்பட மதுபானங்கள்  தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், மினி லாரி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும்,  வீட்டின் உரிமையாளர்  காவேரி, கடலூர் மாவட்டம் கருநாகல்லூரைச் சேர்ந்த சுந்தர் , ஸ்ரீமுஷ்ணம், புதுகுப்பம்  கிராமத்தைச் சேர்ந்த தனவேல்,காந்திகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT