அரியலூர்

செந்துறை அருகே வேன் கவிழ்ந்து 28 பேர் காயம்

DIN

செந்துறை அருகே வியாழக்கிழமை திருமணக் குழுவினர் வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்தனர்.
செந்துறை அருகேயுள்ள காசாங்கோட்டையைச் சேர்ந்த நடராஜன் மகன் சதீஸ்குமார்(30). இவருக்கும், பழமலைநாத புரம் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும், காசாங்கோட்டை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. 
திருமணம் முடிந்து மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மணமகள் ஊரான பழமலைநாதபுரம் கிராமத்துக்கு ஒரு வேனில் திரும்பியுள்ளனர். வேனில் சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர். வேனை சரவணன் என்பவர் ஓட்டினர்.
பழமலைநாதபுரம் கிராமத்தின் அருகே வேன் சென்றபோது  ஸ்டியரிங் உடைந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த மணமக்கள் சதீஸ் குமார், அனிதா, பழமலைநாதபுரம் முத்தம்மாள் (40), மஞ்சுளா (20), பாலமுருகன் (22), நீலமேகம் (52), கர்ணன் (49), கடம்பூர் பழனிவேல் (50), தினேஷ் (3), அறிவழகி(40), அமுதா, சரவணன் உட்பட 28 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். விபத்து குறித்து செந்துறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT