அரியலூர்

மனைவி மாயம்: அரசுப் பேருந்து  ஓட்டுநர் புகார்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மாயமான அரசுப் பேருந்து ஓட்டுநர் மனைவியைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மாயமான அரசுப் பேருந்து ஓட்டுநர் மனைவியைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(35). அரசுப் பேருந்து ஓட்டுநர். இவருக்கும், இவரது மனைவி விஜயகுமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், சிவகுமார் தனது மனைவி விஜயகுமாரியை அழைத்துக்கொண்டு ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்திருந்தார். அங்கு சிவகுமார் புகார் மனு எழுதிக்கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த  விஜயகுமாரி திடீரெனக்  காணவில்லை. 
இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார் பல இடங்களில் தேடியும்  அவர்  கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விஜயகுமாரியைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT