அரியலூர்

ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க கடுமையான சட்டங்கள்  நிறைவேற்றபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க ஒன்றியச்செயலர் கலைமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பத்மாவதி, மாவட்டத் தலைவர் பாக்கியம், அரியலூர் ஒன்றியச் செயலர் மலர்கொடி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT