அரியலூர்

உயிரிழந்த வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு நிதியுதவி

DIN

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகேயுள்ள கார்குடியைச் சேர்ந்த சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு பெங்களூர் மேன்கைன்ட் மருந்து உற்பத்தி நிறுவனம் சார்பில் ரூ.2.50 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் சார்பில் அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர் கிருஷ்ணசாமி சிவசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, சிவசந்திரன் மனைவி காந்திமதியிடம்  காசோலையை வழங்கினார். பெங்களூர் மேன்கைன்ட் மருத்து உற்பத்தியின் மண்டல மேலாளர் ஜெகதீஸ்வரன், மருத்துவ பிரதிநிதி திவாகர், அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT