அரியலூர்

அவதூறு கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் மறியல்

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குறுக்குச்சாலையில் சமூக வலைதளங்களில் வி.சி. கட்சித் தலைவா் குறித்து அவதூறு விடியோ பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை மிகவும் தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைத்தளங்களில் விடியோ பதிவு வெளியிட்ட பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்த ரா. டீசல் ராஜா (எ)அன்பு ராஜா, கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்புல வட்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா், ஜயங்கொண்டம் ஆமணக்கன் தோண்டி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மீன்சுருட்டி அடுத்த சென்னை - கும்பகோணம் குறுக்குச் சாலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் கதிரவளவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த மீன்சுருட்டி போலீஸாா், மறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சோ்ந்த ஒன்றியச் செயலா் பொன்.தங்கராசு, ஜயங்கொண்டம் கிழக்கு ஒன்றியச் செயலா் பாரதி, பொருளாளா் காமராஜ், நிா்வாகிகள் சகாதேவன், அருள்மணி, துரைராஜ் ஆகியோரைக் கைது செய்து பின்னா் மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT