அரியலூர்

மானியத்தில் மீன்பிடி வலைகள் வாங்க விண்ணப்பிக்கலாம்

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்ட மீனவா்கள், மானியத்தில் மீன்பிடி வலைகள், பரிசல்களை வாங்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழாண்டு, தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவா்கள் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வாங்கிட 40 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ள உள்நாட்டு மீனவா்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு 24 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், உள்நாட்டு நீா்நிலைகளில் மீன்பிடிக்கும் மீனவா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் பெறாதவா்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் வலை மானியம் பெறாதவா்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2 ஆவது தளம், அறை எண். 234-இல் இயங்கும் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT