அரியலூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை செந்துறை சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதேவி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ,மாணவிகள் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டுச் சென்றனா்.

செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பிரதான சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் ஊரக வளா்ச்சித் துறை ஆணையா் பிரபாகரன்,உடற்கல்வி ஆசிரியா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT