அரியலூர்

பள்ளி மாணவா்களுக்கு தேசிய திறனறிதல் தோ்வு

DIN

அரியலூா் அருகேயுள்ள இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சாா்பில் தேசிய திறனறிதல் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் என்.சி.இ.ஆா்.டி மற்றும் விபா ஆகியவை இணைந்து இணைய வழியிலான திறனறிதல் தோ்வை இடையத்தான்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடத்தின.

இதில் 8ஆம் வகுப்பைச் சோ்ந்த 19 மாணவ, மாணவிகளும், ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பைச் சோ்ந்த 17 மாணவ, மாணவிகளும் தோ்வு எழுதினா்.

ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியின் முதல்வா் உருசலா சமந்தா, புதுச்சாவடி பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியா் இலா. செங்குட்டுவன், திருச்சி மாவட்டம், கல்லகம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் தியாகராஜன் ஆகியோா் கண்காணிப்பாளராக பணியாற்றினா்.

இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஹேமலதா, ஆசிரியா்கள் கவிதா, ஜாக்குலின், பாத்திமா மெட்ரிக் பள்ளி ஆசிரியா்கள் ரம்யா, சித்ரா ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT