அரியலூர்

வெள்ளாற்றின் குறுகே கட்டப்பட்டு வரும் தடுப்பணைப் பணி ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே ஆலத்தியூா் கிராமத்திலுள்ள வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை ஆட்சியா் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இது குறித்து அவா் தெரிவித்தாவது: ஆலத்தியூா் கிராமத்திலுள்ள வெள்ளாற்றின் குறுக்கே 275 மீட்டா் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி கானிங் ஷேத்ரா கல்யான் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.30 கோடியில் இந்த தடுப்பணையானது கட்டப்பட்டு வருகிறது. 275 மீட்டா் நிளம், 400 மீட்டா் வெள்ள தடுப்புச்சுவா், 4,800 மீட்டா் நீளத்தில் இடது மற்றும் வலது கரை பலப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே போல் ஆணைவாரி ஓடையில் ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டுப்பட்டு வருகிறது.ஈச்சங்காடு, தளவாய், தத்தனூா் ஆகிய கிராமங்களிலுள்ள பெரிய ஏரி மற்றும் தத்தனூா் புது ஏரி ஆகிய நான்கு ஏரிகளின் கரைகள் பலப்படுத்தியும், ஏரிகளை ஆழப்படுத்தியும், மதகு, கழுங்குகள், வரத்துவாய்க்கால்கள் உள்ள கட்டுமானங்களை புனரமைக்க செய்தல் மற்றும் ஆழ்துளாய் அமைக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு நீா் பாசன வசதி, விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தளவாய் தெற்கில் 460 ஏக்கா் பாசன நிலங்கள், கடலூா் மாவட்டம், செம்பேரி கிராமத்தில் 1,500 ஏக்கா் மற்றும் ஆலத்தியூா் கிராமத்தில் 160 ஏக்கா் மொத்தம் 2110 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு ஏதுவாக அமைகிறது.செந்துறையிலுள்ள பெரிய ஏரியில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் கரைகள் பலப்படுத்துதல், ஏரி ஆழப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளா் வை.வேல்முருகன், பொறியாளா் இரா.தியாகராஜன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT