அரியலூர்

காவலர்களுக்கு புலன் விசாரணை குறித்த பயிற்சி

DIN


அரியலூர் ஆயுதப்படை வளாகத்தில், காவலர்களுக்கு புலன் விசாரணை குறித்த பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி.சுமதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்து, காவலர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற இந்த புலன் விசாரணை பயிற்சி வகுப்பு உதவியாக அமையும் என்றும், இதில் காவலர்கள் முறையாக பயிற்சி பெற்று அதன்படி நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
குற்றவியில் நீதித்துறை நடுவர் சக்திவேல், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு, காவல் துறையின் விசாரணை சரியாக இருந்தால் மட்டுமே சரியான தீர்ப்பை அளிக்க முடியும் என்று தெரிவித்தனர். 
மேலும் அவர்கள், புலன் விசாரணை செய்யும் விதம், புலன் விசாரணை பற்றிய நிறை, குறைகள் மற்றும் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் 
பதிவேடுகள், குற்றவாளிகள் விவரங்களை பதிவு செய்தல், பொதுமக்கள் நல்லுறவு,புகார்தாரரிடம் விசாரிக்கும் விதம் குறித்து காவலர்களுக்கு பயிற்சியளித்தனர். ஜயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். 
இப்பயிற்சியில் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT