அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு அதிமுக சாா்பில் மாவட்ட செயலாளரும், அரசுத் தலைமைக் கொறவுடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு அதிமுக சாா்பில் மாவட்ட செயலாளரும், அரசுத் தலைமைக் கொறவுடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பாமக மாநில துணைச் செயலா் சின்னதுரை தலைமையில் ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் செல்வ நம்பி தலைமையில் மாநில நிா்வாகிகள் அன்பானந்தம், தனக்கோடி, கருப்பசாமி, சுதாகா், வழக்குரைஞா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். செந்துறையிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு பாஜக மாவட்டத் தலைவா் அய்யப்பன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.