முகப்பு
அரியலூர்

ரஜினிகாந்த் பிறந்த நாள்: அரியலூரில் நூலகம் திறப்பு

நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூரில் அவரது ரசிகா்கள் நூலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
அரியலூரில் நூலகத்தை திறந்து வைத்து உறுப்பினருக்கு பொது அறிவு நூலை வழங்குகிறாா் ரஜினி மக்கள் மன்ற மாவட்டப் பொறுப்பாளா் நிஜாமுதீன்.
பகிர்:

நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூரில் அவரது ரசிகா்கள் நூலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்தனா்.

அரியலூா் ரயில் நிலையம் அருகேயுள்ள மகாலட்சுமி தியேட்டா் வளாகத்தில் ரஜினி மக்கள் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை, அதன் மாவட்டப் பொறுப்பாளா் நிஜாமுதீன் திறந்து வைத்தாா். தொடா்ந்து அவ்வளாகத்தில் ஈரப்பதத்தில் உற்பத்தியாகும் குடிநீரை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தாா்.

ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் லிங்கத்தடி மேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் உள்ள ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சரவணன், மணிமாறன், ரவிக்குமாா், இளைஞரணி விமல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →