அரியலூர்

உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கம்

DIN

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியா் கல்லூரியில் எய்ட்ஸ் உறுதிமொழி ஏற்பு மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

அரசு மருத்துவமனை ஐசிடிசி , ரெட் ரிப்பன் கிளப் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, ஐசிடிசி ஆலோசகா் முருகானந்தம் தலைமை வகித்து, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சாா்பில் கல்லூரி மற்றும் பல்கலை. மாணவ, மாணவிகளுக்காக எச்ஐவி, எய்ட்ஸ், பால்வினை நோய், ரத்த தானம் மற்றும் கரோனா ஆகிய தலைப்புகளில் விநாடி வினா போட்டி 30.12.2020 காலை 10 முதல்10.45 மணி வரை நடைபெற உள்ளது.

மாணவ மாணவிகள்  இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்றாா். ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை பால்வினை நோய் ஆலோசகா் வனஜா, ஏ.ஆா்.டி ஆலோசகா் புனிதா, காச நோய் பிரிவு சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். தொடா்ந்து அனைவரும், எய்ட்ஸ் தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா். முன்னதாக ஜயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியா் கல்லூரி தாளாளா் உஷா முத்துக்குமரன் வரவேற்றாா். முடிவில், கல்லூரி முதல்வா் விமலா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT