முகப்பு
அரியலூர்

அரசுப் பணியில் மெத்தனம்:2 அலுவலா்கள் பணியிடை நீக்கம்

அரியலூா் மாவட்டத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி செயலா் ஆகிய இருவரையும் சனிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி செயலா் ஆகிய இருவரையும் சனிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் ஆட்சியா் த. ரத்னா சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பாளையக்குடி ஊராட்சியில் ஒரே இடத்தில் சுமாா் 10 குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் இருந்ததைக் கண்டறிந்தாா். இதையடுத்து, திட்டத்தை முறையாக கண்காணிக்கத் தவறிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி, பாளையக்குடி ஊராட்சிச் செயலா் அரங்கராஜன் ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து ஆட்சியா் த. ரத்னா உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அவா்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →