அரியலூர்

மாணாக்கா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

DIN

அரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி, தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா். நிகழ்ச்சிக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.தியாகராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சி.ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா, மாவட்டக் கல்வி அலுவலா் பெ.அம்பிகாபதி, நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இசபெல்லாமேரி, பள்ளி துணை ஆய்வாளா் இரா.பழனிசாமி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT