அரியலூர்

மத்திய அரசின் உதவித்தொகை பெறவிவசாயிகளுக்கான சிறப்பு முகாம்

DIN

அரியலூா் மாவட்டம் தா. பழூரை அடுத்த அணைக்குடம் கிராமத்தில் பாரத பிரதமரின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6,000 நிதியுதவி பெறுவதற்கு விவசாயிகள் தங்களது பெயரைப் பதிவு செய்ய சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாரூக் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தேவிகா இளையராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் இ- பொது சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா். முகாம் முடிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது பெயரைப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT