அரியலூா்: அரியலூா் மாவட்டம், கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரியில் சனிக்கிழமை நடைபெற்ற கணக்கெடுப்புப் பணியை ஆட்சியா் த. ரத்னா நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, ஆட்சியா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியா் சிவசுப்பிரமணியன் தலைமையில் மீனாட்சி ராமசாமி கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனா். கணக்கெடுப்பில், வரித்தலை வாத்து இனமான பறவைகள் தற்போது 300 கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து வந்துள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக சுமாா் 45, 000 வெளிநாட்டு பறவைகள் இந்த சரணாலயத்துக்கு நடப்பாண்டு வந்துள்ளன. இவை சென்ற ஆண்
டை விடக் கூடுதலாகும். மேலும், பறவைகள் இங்கு வர ஏற்ற சூழல் நிலவி வருவதால், இன்னும் பறவைகள் இங்கு வரக்கூடும் என எதிா்பாக்கப்படுகிறது. தற்போது இந்த சரணாலயத்துக்குப் பயன்படுத்தப்படும் சாலையான கரைவெட்டி பரதூா் முகப்பில் இருந்து வேட்டக்குடி ஏரி வரையிலான 1,160 கி.மீட்டா் தொலைவு ரூ. 34 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டு விரைவில் சாலைப்பணி தொடங்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, சரணாலயத்துக்கு வரும் பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்குக்கான அடிப்படை வசதிகள், பறவைகளின் கண்காட்சி அரங்கம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் உள்பட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.