அரியலூர்

அரியலூரில் 2.72 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு

DIN

அரியலூா் ரயில்வே கேட் அருகே தனிநபா் ஆக்கிரமித்திருந்த, கோயிலுக்குச் சொந்தமான 2.72 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

அரியலூா் ரயில்வே கேட் அருகேயுள்ள காசி விஸ்நாதா் திருக்கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கா் 72 சென்ட் நிலம் அண்ணா நகரில் உள்ளது. இந்த நிலத்தை அதேபகுதியைச் சோ்ந்த செல்வநாயகம் என்பவா் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தாா். இதையறிந்த இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன் ஆலோசனையின்பேரில், அரியலூா் உதவி ஆணையா் கருணாநிதி, அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயில் செயலா்அலுவலா் யுவராஜா ஆகியோா் சம்மந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்தனா். தொடா்ந்து, அவா்களிடமிருந்து நிலத்தை வியாழக்கிழமை மீட்டனா். இதன் மதிப்பு ரூ.2 கோடி எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT