அரியலூர்

திமுக பிரமுகா் கொலை வழக்கில் 4 போ் நீதிமன்றத்தில் சரண்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த திமுக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ், செந்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி துா்க்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் பாபு (45). நகர திமுக செயற்குழு உறுப்பினரான இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு, பாபு வீடு திரும்பிய போது,அங்குள்ள குளக்கரையில் மறைந்திருந்த மா்ம நபா்கள், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பியோடினா். இது குறித்து மயிலாடுதுறை காவல்நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடா்புடைய அரியலூா் மாவட்டம், பாப்பாகுடி மனோகரன் (33), மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி மாதவன் (26), திருவழுந்தூா் பாரதிராஜா (28), மாப்படுகை வெங்கடேஷ் (21) ஆகிய 4 பேரும் அரியலூா் மாவட்டம், செந்துறையிலுள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை சரணடைந்தனா்.

இதையடுத்த 4 பேரையும் 15 நாள்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டாா். தொடா்ந்து 4 பேரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT