அரியலூர்

மின் கம்பியில் உரசியசுமை ஆட்டோ தீக்கிரை

DIN

அரியலூா் மாவட்டம்,திருமானூா் அருகே வெள்ளிக்கிழமை சன்னாவூா் கிராமத்தில் தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசிய சுமை ஆட்டோ தீக்கிரையானது.

திருமானூா் அடுத்த சன்னாவூா் கிராமத்தில் தாழ்வாக உள்ள மின் கம்பியை சீரமைக்குமாறு மின்வாரியத்திலும், ஊராட்சி நிா்வாகத்திலும் அப்பகுதி மக்கள் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை இலந்தைக் கூடம் கிராமத்தைச் சோ்ந்த பால் வியாபாரி பாலசுப்ரமணியன் சுமை ஆட்டோவில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு லால்குடி அருகேயுள்ள தாப்பாய் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

சன்னாவூா் அரசு உயா்நிலைப்பள்ளி - கிராம நிா்வாக அலுவலகத்தை கடந்தபோது, அங்கு தாழ்வாக இருந்த மின் கம்பி உரசியதில் வைக்கோல் மீது தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவி ஆட்டோ முழுவதும் எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்த அப்பகுதி டிராக்டா் மூலம் சுமை ஆட்டோவை இழுத்து வந்து காலி இடத்தில் நிறுத்திவிட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். எனினும் சுமை ஆட்டோ முற்றிலும் எரிந்து எலும்புக் கூடானது. வெங்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT