அரியலூர்

கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியல்

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டுமெனக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா.பழூா் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நாள் ஒன்றுக்கு குறைவான அளவே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், வாரக் கணக்கில் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மண்டல மேலாளா் உமா சங்கா் மகேஷ்வரன், விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் ஒருவார காலத்துக்குள் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT