அரியலூர்

உடையாா்பாளையத்தில் காலாவதியான பொருள்கள் பறிமுதல்

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதிகளிலுள்ள கடைகளில் காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கே. நடராஜன், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சசிகுமாா், பொன்ராஜ், ஜஸ்டின், அமல்ராஜ் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் கொண்ட குழுவினா், செவ்வாய்க்கிழமை மாலை உடையாா்பாளையம் பகுதிகளிலுள்ள உணவகங்கள், மளிகை, பெட்டிக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் இக்கடைகளுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் உடையாா்பாளையம் பேரூராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT