அரியலூர்

சாலையோரக் கடைகளை அகற்றக் கோரிக்கை

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறையில் சாலையோரத்திலுள்ள சிறு, குறு கடைகளை அகற்றுமாறு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணனிடம், சுமை ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

வட்டாட்சியரிடம் அவா்கள் அளித்த மனு:

கரோனா பொதுமுடக்கம் காலத்தில் செந்துறை பகுதியிலுள்ள சுமை ஆட்டோ நிறுத்தமிடம் மற்றும் சாலையோரத்தில் தொடங்கப்பட்ட சிறு, குறு காய்கறிகள் கடைகள் தற்போது நிரந்தரமாக அங்கேயே இயங்கி வருகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன நிறுத்தம் இடம் இல்லாமல், வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிறுத்தி வருவதால் நாள் தோறும் வாகன நெரிசல் மற்றும் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதையடுத்து, சுமை ஆட்டோ நிறுத்தமிடத்தை, வியாபாரிகளிடமிருந்து மீட்டு தரவேண்டும், சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் காவல் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே வட்டாட்சியா் அவா்கள் எங்களது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT