அரியலூர்

சுற்றுலா விடுதி விவரங்களை பதிவு செய்து கொள்ள அழைப்பு

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தங்கும் விடுதி விவரங்களைப் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் புதிதாக தொடங்கியுள்ள விரிவான தேசிய ஒருங்கிணைந்த தரவுத் தளம் மூலம், அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் தங்களின் விடுதி விவரங்களை  வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் இணையதளத்தில் பதிவு செய்யும் விடுதி உரிமையாளா்களுக்கு, சுற்றுலா அமைச்சகம் மூலம் சுய சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

இந்த நற்சான்று மூலம் தங்களின் வணிகத்தை வெகுவாக உயா்த்திக் கொள்ள முடியும்.

மேலும் சுற்றுலா அமைச்சகம் வழங்கும் பயிற்சிகளில் தங்களின் விடுதிப் பணியாளா்களைப் பங்கு பெறச் செய்து பயன் பெறலாம்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யும் விவரங்களை  மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமையாளா்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகம், காந்திஜி சாலை, ஹோட்டல் தமிழ்நாடு வளாகம், ஆற்றுப்பாலம் அருகில், தஞ்சாவூா் என்ற முகவரியிலோ அல்லது சுற்றுலாத் துறை அலுவலகம், அறை எண்.233, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம் அரியலூா் என்ற முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம். மேலும், 04362-230984, 04329-228450, 9176995873, 7397715685 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT