அரியலூர்

வெல்டிங் தொழிலாளி கொலை வழக்கில் இளைஞா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வெல்டிங் தொழிலாளி கொலை வழக்கில் அவரது நண்பா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு ஆயுதகளம் கிராமத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி பிரவீன் குமாா் (23), அப்பகுயில் உள்ள ஒருவரது வீட்டின் உபயோகமற்ற கழிவுநீா்த் தொட்டியில் உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.

போலீஸாா் விசாரணையில், நண்பா்களுடன் சென்ற பிரவீன் குமாா் பின்னா் காணாமல் போனதும், மேலும், அதே கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பா் கிருஷ்ணராஜா(22) தலைமறைவானதும் தெரியவந்தது. கிருஷ்ணராஜாவைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், தனது சகோதரியுடன் பிரவீன்குமாா் பழகி வந்ததைக் கண்டித்தும் கேட்காததால், அவருக்கு மது வாங்கிக் கொடுத்து கடந்த சனிக்கிழமை இரவு கொலை செய்ததை கிருஷ்ணராஜா ஒப்புக்கொண்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT