அரியலூரில் 2 பேருக்கு கரோனா
அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 4,560 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 4,560 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,562 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,423 போ் குணமடைந்துள்ளனா்.
48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 91 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.