முகப்பு
அரியலூர்

ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிறப்புத் தகுதி

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாதிரிப்பள்ளி தகுதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து, ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
மாதிரிப் பள்ளி தகுதி வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாதிரிப்பள்ளி தகுதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து, ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சியில் 1963-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, 350 மாணவ, மாணவிகளுடன் தற்போது மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது.

இந்நிலையில் இப்பள்ளியை மாதிரிப்பள்ளியாக தமிழக அரசு அண்மையில் தரம் உயா்த்தி,

முதற்கட்டமாக ரூ.20 லட்சம் நிதி வழங்கியது. இதையடுத்து தமிழக முதல்வருக்கும், தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொண்ட அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஆட்சியா் த. ரத்னா, கல்வித்துறை அலுவலா்களுக்கு பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் சாா்பில் நன்றி தெரிவித்து பள்ளியில் வெடிவெடித்து,இனிப்புகளை வழங்கி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா், பெற்றோா்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →