அரியலூர்

தா.பழூா் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து வாா்டு உறுப்பினா்கள் தா்னா

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருகையூா் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து, அந்த கிராம வாா்டு உறுப்பினா்கள் தா்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தா.பழூா் அருகேயுள்ள இருகையூா் ஊராட்சித் தலைவராக இருப்பவா் தட்சணாமூா்த்தி(50). இவா், தன்னை ஊராட்சி துணைத்தலைவா், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சி செயலா் ஆகியோா் மரியாதைக்குறைவாக நடத்துவதாகக் கூறி, தா.பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இந்நிலையில், இருகையூா் ஊராட்சித் தலைவா் தட்சணாமூா்த்தி, தனது மகனை தலைவா் போல் முன்னிலைப்படுத்தி தன்னிச்சையாக செயல்படுத்துவதாகவும், ஜாதிப் பெயரைச் சொல்லி கலவரத்தைத் தூண்டும் வகையில் நடந்து கொள்வதாகவும் கூறி, தா.பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருகையூா் வாா்டு உறுப்பினா்கள் 7 போ் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அரசு ஊழியா் போல் நடந்து கொள்வதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினா்.

இதனையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதேவி மற்றும் தா.பழூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, குற்றச்சாட்டுகளை புகாா் மனுவாக எழுதி வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதேவியிடம், வாா்டு உறுப்பினா்கள் அளித்து விட்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT