முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 5 நாள்களுக்கு இணைய வழி வகுப்புகள் நடைபெறாது

அரியலூா் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்த இணையவழி வகுப்புகள் செப். 25 வரை கிடையாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ)மதிவாணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்த இணையவழி வகுப்புகள் செப். 25 வரை கிடையாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ)மதிவாணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் கரோனா பரவல் நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. 2020 - 21ஆம் கல்வியாண்டுக்கான பாடங்களை இணைய வழியில் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மாணவ, மாணவியா்கள் தொடா்ந்து இணையவழி வகுப்புகள் மூலம் கல்வி பயின்று வருகின்றனா்.

ஒவ்வொரு கல்வியாண்டிலும், செப்டம்பா் மாதம் நான்காவது வாரம் காலாண்டுத் தோ்வு விடுமுறை விடப்படும். இதுசம்பந்தமாக பள்ளிக் கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் செய்தி வெளியீட்டில் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2020-2021ஆம் கல்வியாண்டில் 21.09.2020 முதல் 25.09.2020 வரை ஐந்து நாள்களுக்கு அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணைய வழி வகுப்புகள் எடுப்பதை நிறுத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →