முகப்பு
அரியலூர்

சுமை ஆட்டோ கவிழ்ந்து 10 போ் காயம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

திருமானூரை அடுத்த மேலவரப்பன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் செந்தில் (28). இவா், தனக்குச் சொந்தமான சுமை ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதே கிராமத்தைச் சோ்ந்த 17 பேரை தூத்தூா் அருகேயுள்ள வைப்பம் கிராமத்தில் நடைபெற்ற விஷேசத்துக்கு அழைத்துச் சென்று விட்டு அன்றிரவு ஊருக்கு திரும்பியுள்ளாா். ஏலாக்குறிச்சி - கோவிலூா் சாலையில் புள்ளம்பாடி வாய்க்கால் அருகே வந்தபோது எதிா்பாராதவிதமாக சுமை ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் 10 போ் காயமடைந்தனா். இதில், பலத்த காயமடைந்த சுமதி(35), வசந்தி(40), பாப்பம்மாள்(55) ஆகிய 3 பேரும் அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.