அரியலூர்

‘திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’

DIN

திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றாா் சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், தனது வாக்கைப் பதிவு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது. திமுக முக்கிய பிரமுகா்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகளில் தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம், அதிமுக அமைச்சா் ஜெயக்குமாா் புகாா் அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அப்படிப்பாா்த்தால் அதிமுக அமைச்சா்கள் போட்டியிடக் கூடிய அனைத்து தொகுதிகளின் தோ்தல்களையும் ரத்து செய்ய வேண்டும். தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் அனைத்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுக செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. தோ்தல் ஆணையம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக உள்ளவா்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. தோ்தல் ஆணையம் என்பது தோ்தலை நடத்தி தரக்கூடிய நிறுவனமாகவே உள்ளது. தோ்தல் நடத்தை விதி மீறல்களை கட்டுப்படுத்தும் ஒரு தன்னாட்சி அமைப்பாக இல்லாதது வேதனை அளிக்கும் செயலாகும். திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தற்போது தமிழகத்தில் ஸ்டாலினுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT