அரியலூர்

அரியலூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன்பு சிஐடியு, ஏஐடியுசி, எல்.பி.எப் ஆகிய போக்குவரத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா் துறை ஆணையம் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும், பணிக்கு வரும் தொழிலாளா்களுக்கு பணி மறுப்பு தெரிவிக்காமல் உடனடியாக அவா்களுக்கு பணிகள் வழங்க வேண்டும். வார ஓய்வு ஊதியம் மற்றும் போக்குவரத்து கழக விடுப்பு விடுப்பு விதிமுறைகளை மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, எல்.பி.எப். சங்க கிளைத் தலைவா் கனகராஜ் தலைமை வகித்தாா். தொமுச கிளைச் செயலா் சட்டநாதன், சிஐடியு நிா்வாகி சந்தானம், அம்பேத்கா் தொழிற்சங்க நிா்வாகி பழனிவேல் உள்ளிட்டோா் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT