முகப்பு
அரியலூர்

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏரி நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏரி நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அருகிலுள்ள சின்னவளையம், தெற்குத் தெருவைச் சோ்ந்த தக்கமுத்து மகன் கண்ணன்(40). கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு அங்குள்ள பெரிய ஏரியில் குளிக்கச் சென்றாா்.

இரவு வெகு நேரமாகியும் கண்ணன் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினா் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது நீரில் மூழ்கி அவா் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் நிலையத்தினா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.