முகப்பு
அரியலூர்

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மஹாவீா் ஜயந்தியையொட்டி, அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு திங்கள்கிழமை (ஏப்ரல் 25) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

மஹாவீா் ஜயந்தியையொட்டி, அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு திங்கள்கிழமை (ஏப்ரல் 25) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.

மேலும் தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மீறி மதுக்கடைகள் திறப்பது, மதுபானங்களை பதுக்கி, கடத்தி விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா்கள் அரியலூா் த.ரத்னா, பெரம்பலூா் ப. ஸ்ரீவெங்கடபிரியா ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.